உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வந்தே பாரத் ரயிலில் சிக்கி ஒருவர் பலி

வந்தே பாரத் ரயிலில் சிக்கி ஒருவர் பலி

விழுப்புரம் : விழுப்புரத்தில் அடையாளம் தெரியாத நபர் வந்தே பாரத் ரயிலில் சிக்கி இறந்தார்.சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்தே பாரத் ரயில் நேற்று காலை 7.15 மணிக்கு கண்டம்பாக்கம் ரயில் நிலையத்தை கடந்து விழுப்புரம் அருகே வந்த போது, 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் நபர், தண்டவாளத்தை கடந்தார். அப்போது, ரயிலில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.தகவலறிந்த விழுப்புரம் ரயில்வே போலீசார். உடலைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இறந்தவர் குறித்து விபரம் தெரிந்தால் மொபைல் 9600866073 எண்ணில் தகவல் கூறலாம் என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ