மேலும் செய்திகள்
பெண் உட்பட 3 பேரிடம் ரூ. 2.86 லட்சம் 'அபேஸ்'
30-Jun-2025
குறைந்த வட்டியில் கடன் பெற்று தருவதாக மோசடி
23-Jun-2025
விழுப்புரம்,: விழுப்புரத்தில் பெண் துணை பேராசிரியரிடம் ஆன்லைனில், ரூ.9.83 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம், வி.மருதுார் பகுதியை சேர்ந்தவர் விஜயபதி மகள் சரண்யா,34; தனியார் கல்லுாரி துணை பேராசிரியர். இவர் தனது மொபைலில் கடந்த 26 ம் தேதி இன்ஸ்டாகிராமை பயன்படுத்திய போது, பகுதிநேர பணி என்ற விளம்பரத்தை தொட்டார். இதையடுத்து அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் அவர் அனுப்பும் வீடியோவை 'லைக்' செய்து அதை 'ஸ்கிரீன்ஷாட்' எடுத்து அனுப்பினால் குறிப்பிட்ட தொகை தரப்படும் என கூறினார். இதை நம்பிய சரண்யா, அந்த மர்ம நபர் கூறியபடி செய்து ரூ.120 பெற்றார். தொடர்ந்து மர்ம நபர், சரண்யாவிற்கு ஒரு லிங்க்கை அனுப்பி சிறிய தொகையை முதலீடு செய்து 'டாஸ்க்' முடித்தால் அதிக லாபம் பெறலாம் என கூறினார்.இதையடுத்து, அவர் தனக்கென யூசர் ஐ.டி., பாஸ்வேர்டை உருவாக்கி, மர்ம நபர் அனுப்பிய லிங்க்கிற்குள் சென்று ரூ.700 முதலீடு செய்து ரூ.910; ரூ.3 ஆயிரம் முதலீடு செய்து ரூ.4,800; திரும்ப பெற்றார். இதை நம்பியவர் தனது வங்கி கணக்குகளோடு இணைக்கப்பட்ட 'ஜிபே' மூலம் மர்ம நபர் கூறிய யு.பி.ஐ., ஐ.டி.,களுக்கு, கடந்த 26 ம் தேதியில் இருந்து 3ம் தேதி வரை 16 தவணைகளில் மொத்தம் 9 லட்சத்து 83 ஆயிரத்து 130 ரூபாய் அனுப்பி டாஸ்க்கை முடித்தார். இதையடுத்து சரண்யாவிற்கு சேர வேண்டிய தொகையை தராமல் மர்ம நபர்கள் ஏமாற்றி வந்தனர். அப்போது அவருக்கு பணத்தை இழந்தது தெரிந்தது. இது குறித்து சரண்யா நேற்று விழுப்புரம் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
30-Jun-2025
23-Jun-2025