மேலும் செய்திகள்
கரை ஒதுங்கிய பெண் சடலம்
17-Jun-2025
மரக்காணம் : மரக்காணம் அடுத்த கீழ்புத்துப்பட்டில் 28.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 440 வீடுகள் திறப்பு விழா நடந்தது.முகாமில் கட்டி முடிக்கப்பட்ட 440 வீடுகளை நேற்று சென்னையில் இருந்த காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.கீழ்புத்துப்பட்டு முகாமில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமை தாங்கினார்.ரவிக்குமார் எம்.பி., மஸ்தான் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பயனாளிகளிடம் வீடுகள் ஒப்படைக்கப்பட்டது.கூடுதல் கலெக்டர் பத்மஜா, உதவி கலெக்டர் வெங்கடேஸ்வரன், சேர்மன் தயாளன், திண்டிவனம் சார் ஆட்சியர் தமிழரசன், ஊரக வளர்ச்சித்துறை செயற் பொறியாளர் கண்ணன், மரக்காணம் தாசில்தார் நீலவேணி, இலங்கைத் தமிழர் நலன் தனி தாசில்தார் ஸ்ரீதேவி, மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிலம்புச்செல்வன், அருளரசி உட்பட பலர் பங்கேற்றனர்.
17-Jun-2025