உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புதிய பள்ளி கட்டடம் திறப்பு விழா

புதிய பள்ளி கட்டடம் திறப்பு விழா

செஞ்சி; ஊரணித்தாங்கல் அரசு துவக்கப் பள்ளியில் 17.30 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பள்ளி கட்டடம் திறப்பு விழா நடந்தது. ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் மதன், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் செல்வகுமாரி வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., பள்ளி கட்டடத்தை திறந்து வைத்து பேசினார். ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், துரை, ஊராட்சி தலைவர் சாரதா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோவிந்தராஜ், முன்னாள் தலைவர் தன்ராஜ். மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை, தொ.மு.ச., நிர்வாகி கோதண்டராமன், ஆசிரியை திலகவதி மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை