உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குடும்ப பிரச்னையில் பெயிண்டர் தற்கொலை

குடும்ப பிரச்னையில் பெயிண்டர் தற்கொலை

கோட்டக்குப்பம்: குடும்ப பிரச்னையில் பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி லெனின் வீதி, சாமிப்பிள்ளை தோட்டத்தை சேர்ந்தவர் ரத்தினவேல் மகன் மணிகண்டன்,31; பெயிண்டர். இவரது மனைவி ஜீனத் பஷிரா. இருவரும் கோட்டக்குப்பம் சோதனைக்குப்பத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.இந்நிலையில் இரு தினங் களக்கு முன் தம்பதிக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டது. அதில் ஜீனத் பஷிரா கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.இந்நிலையில் நேற்று மாலை வரை மணிகண்டனின் வீட்டின் கதவு மூடப்பட்டிருந்ததால், சந்தேக மடைந்த அவரது உறவினர்கள், கதவை உடைத்து பார்த்தபோது, மணிகண்டன் துாக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். உடன் அவரை மீட்டு, பிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி