விழுப்புரம் - புதுச்சேரி இடையே ஓடும் ரயிலில் ஓவிய போட்டி
விழுப்புரம்: புதுச்சேரி திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பில் ஓடும் ரயிலில் ஓவியப்போட்டி வரும் 13ம் தேதி நடக்கிறது. புதுச்சேரி திருவள்ளுவர் கலைக்கூடம் ஆண்டுதோறும் விழுப்புரம் மாணவர்கள் பங்கேற்கும் ஓடும் ரயிலில் ஓவியப் போட்டியை நடத்தி வருகிறது. இந்தாண்டு 20வது முறையாக வரும் 13ம் தேதி மாலை 5:40 மணிக்கு விழுப்புரம் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் புதுச்சேரி பயணிகள் ரயிலில் விழுப்புரம் மாணவர்கள் பங்கேற்கும் ஓடும் ரயிலில் ஓவிய போட்டி நடக்கிறது. அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். போட்டியில், 4ம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை கொடுக்கப்படும் படத்திற்கு ஏற்ப வண்ணம் தீட்ட வேண்டும். 8ம் வகுப்பு முதல் கல்லுாரி வரை மாணவர்கள் 'துாய்மையான இந்தியா', 'வளர்ச்சி அடைந்த இந்தியா' 'இயற்கை ஓவியம்' போன்ற தலைப்பில் ஓவியம் வரைந்து, வண்ணம் தீட்டி படத்தை முழுமையாக்கி தர வேண்டும். சிறந்த ஓவியங்களுக்கு பதக்கங்கள் மற்றும் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். அனுமதி சீட்டிற்கு, 'புக் பார்க்' 171, ஆர்.கே. எஸ்., காம்ப்ளக்ஸ், நேதாஜி ரோடு, காந்தி சிலை அருகே, விழுப்புரம் என்ற விலாசத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இத்தகவலை புதுச்சேரி திருவள்ளுவர் கலைக்கூட செயலாளர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.