உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விக்கிரவாண்டியில் இன்று பனை கனவு திருவிழா

விக்கிரவாண்டியில் இன்று பனை கனவு திருவிழா

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த பூரிகுடிசை கிராமத்தில் இன்று நடக்கும், பனை கனவு திருவிழாவில், நாம் தமிழர் கட்சி சீமான், முன்னாள் மேயர் சைதை துரைசாமி பங்கேற்கின்றனர்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியம், வேம்பி மதுரா பூரிகுடிசையில் தமிழ்நாடு பனையேரிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று (24ம் தேதி) காலை மாநில ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் தலைமையில் பனை கனவு திருவிழா நடக்கிறது.விழாவில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி உள்ளிட்ட மாநில மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.பனைக்கு படையலிட்டு, பனையேறும் வீர விளையாட்டு, பனை சம்பந்தப்பட்ட பொருட்கள் கண்காட்சி, கருத்தரங்கம், விற்பனை, கலை நிகழ்ச்சிகளும், இரவு 7:00 மணிக்கு, 1000 பேர் பங்கேற்கும் மாவொளி சுற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை