உள்ளூர் செய்திகள்

பனை விதை நடும் விழா

அவலுார்பேட்டை : அவலுார்பேட்டையில் பனைமர குறுங்காடு அமைக்க பனை விதை நடும் நிகழ்ச்சி நடந்தது.அவலுார்பேட்டை அடுத்த ரவணாம்பட்டு ஏரியில் குறுங்காடு அமையும் இடத்தில் டிராக்டர் மூலம் உழவுப்பணி மேற்கொண்டு 5000 பனை விதைகள் நடும் பணி நடந்தது.மேல்மலையனுார் தாசில்தார் தனலட்சுமி தலைமை தாங்கி விதை நடும் பணியை துவக்கி வைத்தார்.வி.ஏ.ஓ., காளிதாஸ், வார்டு உறுப்பினர் ராஜ்குமார், மரம் நடுவோர் சங்க நிர்வாகி மகாராஜன், ஊராட்சி செயலாளர் வெங்கடேசன், ஜான், ஜாகிர் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை