மேலும் செய்திகள்
அரசு ஆண்கள் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம்
25-Oct-2024
மயிலம் : மயிலம் ஊராட்சி ஒன்றியம் கொத்தமங்கலம் உயர்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடந்தது.பள்ளி வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு, தலைமையாசிரியர் தண்ட பாணி தலைமை தாங்கினார். பள்ளி ஆசிரியர்கள் ஜெயராமன், புருஷோத்தமன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சற்குணம் முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் ஜெயராஜ் பிரபு வரவேற்றார்.கூட்டத்தில் 9, 10ம் வகுப்பு மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் பங்கேற்றனர். காலாண்டு தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் குறித்து விவாதிக்கப்பட்டது. வருகின்ற அரையாண்டு தேர்வில் இதை விட மாணவர்கள் கூடுதலாக மதிப்பெண் பெறவும் அரசு பொது தேர்வில் நூறு சதவிகித வெற்றியை பெறுவதற்கு முழு முயற்சியை மாணவர்கள் எடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியர் தண்டபாணி கேட்டுக் கொண்டார்.
25-Oct-2024