பகுதிநேர ஆசிரியர்கள் சங்க செயற்குழு கூட்டம்
விழுப்புரம் : விழுப்புரத்தில் தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநில பொறுப்பாளர் இளங்கோவன், இணைச் செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் ஜனார்த்தனன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர் சங்கத்தின் நிறுவன தலைவர் சுந்தர்கணேஷ் பேசினார்.மாநில தலைவர் முருகதாஸ், பொதுச் செயலாளர் பெரியசாமி, ஒருங்கிணைப்பாளர் இளவரசன் விளக்க உரையாற்றினர்கூட்டத்தில், சங்கப்பணிகளை மறுகட்டமைப்பு செய்வது. பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசை வலியுறுத்தி மாவட்டங்கள் தோறும் போராட்டம் நடத்துவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.