உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பஸ் நிலையத்தில் மாடுகள் திரிவதால் பயணிகள் அவதி

பஸ் நிலையத்தில் மாடுகள் திரிவதால் பயணிகள் அவதி

விழுப்புரம்: விழுப்புரம் பஸ் நிலையத்தில் ஏராளமான மாடுகள் திரிவதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு இடையூறாக அடிக்கடி நாய்கள், மாடுகள் திரிந்து வருகிறது. நேற்று தீபாவளி முடிந்து, ஏராளமான பயணிகள் வெளியூர் செல்வதற்கு புதிய பஸ் நிலையத்தில் காத்திருந்தனர்.அப்போது, பஸ் நிலைய நடை மேடை, பஸ் நிறுத்துமிடங்களில் ஏராளமான பசு மாடுகள் திரிந்து இடையூறை ஏற்படுத்தியது.பஸ் நிலையத்தில் திரியும் மாடுகளைப் பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை