உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பென்ஷனர்கள் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பென்ஷனர்கள் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் பென்ஷன் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தாலுகா அலுவலகம் முன் அகிலபாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பு சார்பில் நடந்த ஆர்பாட்டத்திற்கு, சுப்புராயலு தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் குகசரவண பவன் முன்னிலை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல் படுத்த வேண்டும். 70 வயது பென்ஷன்தாரர்களுக்கு 10 சதவீத கூடுதல் பென்ஷன் வழங்க வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சங்க நிர்வாகிகள் தட்சணாமூர்த்தி, கோவிந்தராஜி, அண்ணாமலை, கலியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

விழுப்புரம்

காணை பி.டி.ஓ., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கிளை தலைவர் ராஜி கண்ணன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ராமு, சிதம்பரம் மாவட்ட தலைவர் சிவகுருநாதன் கோரிக்கை வலியுறுத்தி பேசினர். அரசு ஊழியர் சங்க பிரதிநிதி கண்ணன் வாழ்த்தி பேசினார். ஓய்வூதியர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ