உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோலியனுாரான் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவு குவியல்கள் துர்நாற்றத்தால் மக்கள் கடும் அவதி

கோலியனுாரான் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவு குவியல்கள் துர்நாற்றத்தால் மக்கள் கடும் அவதி

விழுப்புரம், : கோலியனுாரான் வாய்க்காலில், பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.விழுப்புரம் நகரின் மையப்பகுதியில், கோலியனுாரான் வாய்க்கால் செல்கின்றது. விழுப்புரம் அடுத்த தெளி தென்பெண்ணை ஆற்றில் உருவாகும் இந்த வாய்க்கால், கோலியனுார் ஏரி வரை ஆற்று தண்ணீர் செல்லும் நீர்பாசன வாய்க்காலாக இருந்தது. காலப்போக்கில் இது கழிவுநீர் வாய்க்கலாக மாறிவிட்டது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக இந்த வாய்க்கால் செல்வதால், வாய்க்கால் சுவர்கள் கடந்த ஆண்டு சீரமைக்கப்பட்டு, சிமெண்ட் கான்கிரீட் சுவர்கள் அமைக்கப்பட்டது. வாய்க்கால் ஓரம் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதி குப்பைகளை வாய்க்காலில் வீசுகின்றனர். இதுதவிர, ஓட்டல்கள், வணிக வளாகங்களில் இருந்து நேரடியாக கழிவுகள் இந்த வாய்க்காலில் சேர்க்கப்படுகிறது. இதனால் வாய்க்கால் முழுதும் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் குவிந்து கிடக்கிறது. பிளாஸ்டிக் கழிவுகளால், கழிவுநீர் வழிந்தோட வழியின்றி தேங்கி நிற்பதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. மாவட்டத்தை சுத்தமாக வைத்து கொள்ள மாவட்ட நிர்வாகம், நகராட்சி பல முயற்சி எடுத்தாலும், மக்கள் பொறுப்புணர்வு இன்றி, வாய்க்காலில் வீசும் கழிவுகள், குப்பைகளால் கோலியனுாரான் வாய்க்கால் விழுப்புரத்தின் கூவம்போல ஓடுகிறது. எனவே, வாய்க்காலில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை