உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஊராட்சி அலுவலகம் முன் மக்கள் முற்றுகை

ஊராட்சி அலுவலகம் முன் மக்கள் முற்றுகை

செஞ்சி: செம்மேடு ஊராட்சியில் ரியல் எஸ்டேட் நிறுவனத் தினர் அரசு இடத்தை ஆக்கிரமித்து போட்ட தார் சாலையை அகற்றக் கோரி கிராம மக்கள் ஊராட்சி அலுவலகம் முன் முற்றுகை யிட்டதால் பரபரப்பு நிலவியது.செஞ்சி அடுத்த செம்மேடு ஊராட்சியில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் அரசு பாதை புறம்போக்கில் தார் சாலை அமைத்துள்ளனர். அரசு இடத்தை ஆக்கிர மித்ததற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஊர்வலமாக சென்று, ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். மேலும் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி ஊராட்சி தலைவர் மற்றும் வி.ஏ.ஓ., விடம் மனு கொடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ