உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பேராவூர் அரசு உயர்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சென்டம்

பேராவூர் அரசு உயர்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சென்டம்

வானுார் : பேராவூர் அரசு உயர்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.இப்பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். பள்ளிக்கு நுாறு சதவீத வெற்றியை தேடித் தந்தனர். மாணவர்கள் ஜீசாந்த் 464, ஆனந்தராஜ் 455, சஞ்சய் 440 மதிப்பெண் பெற்று சிறப்பிடங்களைப் பிடித்தனர். ஏழு மாணவர்கள் 400க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். பள்ளி அளவில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) கிருஷ்ணஜெயந்தி, ஊராட்சி தலைவி தமிழ்ச்செல்வி ராமலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் லதா மணிமாறன், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர், உறுப்பினர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை