உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குடிநீர் பிரச்னையை தீர்க்கக்கோரி சுனாமி குடியிருப்பு பகுதி மக்கள் மனு

குடிநீர் பிரச்னையை தீர்க்கக்கோரி சுனாமி குடியிருப்பு பகுதி மக்கள் மனு

கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட 12வது வார்டு சுனாமி குடியிருப்பு பகுதி மக்கள், குடிநீர் பிரச்னையை தீர்க்கக்கோரி அப்பகுதி மக்கள் நகராட்சி கமிஷனரிடம் மனு அளித்துள்ளனர்.மனு விபரம்:சுனாமி பேரழிவின்போது பாதிக்கப்பட்ட எங்களுக்கு 12வது வார்டில், தொண்டு நிறுவனம் கட்டிக் கொடுத்த வீடுகளில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்து வருகிறோம். ஆனால், இப்பகுதியில் அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளது.குறிப்பாக குடிநீர் பிரச்னை உள்ளது. குடிநீர் நிறம் மாறி வருவதால், குடிநீர் பருக முடியாமல் அவதிக்குள்ளாகி வருகிறோம்.மேலும், துாய்மைப் பணியாளர்கள் சரியாக வருவதில்லை. குப்பைகள் வாரப்படுவதில்லை.இது குறித்து வார்டு கவுன்சிலரிடம் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே , தாங்கள் தலையிட்டு, குடிநீர் உள்ளிட்ட பிரச்னைகளை தீர்த்து வைக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !