மருத்துவக் கல்லுாரி டீனிடம் அடிப்படை வசதி கேட்டு மனு
விழுப்புரம்: அரசு மருத்துவக் கல்லுாரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பழங்குடியினர் நல செயற்பாட்டாளர் மற்றும் அரசு மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினரான வழக்கறிஞர் அகத்தியன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை டீன் லுாசி நிர்மல் மெடோனாவை சந்தித்து, மனு அளித்தார். மனுவில், மருத்துவமனையில் குடிநீர், போதிய கழிப்பிட வசதி, துாய்மையான பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ பயனாளர்களுக்கு கூடுதல் கவனத்துடன் சிகிச்சை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நிலைய மருத்து அதிகாரி ரவிக்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் பார்த்தசாரதி உடனிருந் தனர்.