உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெட்ரோல் குண்டு வீச்சு; வாலிபருக்கு வலை

பெட்ரோல் குண்டு வீச்சு; வாலிபருக்கு வலை

மரக்காணம்; மரக்காணம் அருகே முன்விரோதம் காரணமாக நள்ளிரவில் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த கூனிமேடுகுப்பம், கெங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வினாயகமூர்த்தி, 45; அதே பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் ஜான்சன், 22; மீனவர்கள். இருவருக்குமிடையே முன்விரோதம் உள்ளது.நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு வினாயகமூர்த்தி கடற்கரையோரம் இயற்கை உபாதை கழிக்கச் சென்றார். அவரை வழிமறித்து ஜான்சன் தகராறு செய்துள்ளார். அங்கிருந்த சக மீனவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.அன்று இரவு 12:00 மணிக்கு வினாயகமூர்த்தியின் வீட்டு ஜன்னலில் ஜான்சன் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடினார். இதில், வீட்டின் ஜன்னல் உடைந்து சேதமானது.இது குறித்த புகாரின் பேரில், மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து ஜான்சனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ