மேலும் செய்திகள்
சத்தியமங்கலம் சாலை சேதம் சீரமைக்க வேண்டுகோள்
21-Oct-2024
செஞ்சி : செஞ்சி ஒன்றிய கிராமங்களில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இலவச பிசியோதெரபி சிகிச்சை முகாம் நடந்தது.மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் செஞ்சி பொன்பத்தி, காரை, மீனம்பூர், சத்தியமங்கலம், சிறுநாம்பூண்டி, அத்தியூர் ஆகிய கிராமங்களில் இலவச பிசியோதெரபி சிகிச்சை முகாம் நடந்தது. சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய பிசியோதெரபி டாக்டர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.சென்னை மீனாட்சி பிசியோதெரபி கல்லுாரி மருத்துவ குழுவினர் சிகிச்சையளித்தனர். முகாமில், கழுத்து, தோள்பட்டை, இடுப்பு வலிக்கு சிகிச்சை அளித்தனர். ஒருங்கிணைப்பாளர் ஜோஷ்வா ஜாய்சன், மற்றும் மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர்.
21-Oct-2024