மேலும் செய்திகள்
9 கிலோ குட்கா பறிமுதல் வியாபாரி கைது
28-Sep-2024
மயிலம்: மயிலம் அருகே குடிநீர் வராததை கண்டித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மயிலம் அடுத்த அவ்வையார்குப்பம் கிராமத்தில் கால்வாய்களை சீரமைக்கும்போது குடிநீர் பைப் லைன் உடைந்து விட்டது. இதனால் கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் தடைபட்டது. இதனால் கிராம மக்கள் அவதி அடைந்தனர்.பின்னர் குடிநீர் பைப் லைனில் தண்ணீர் வராததை கண்டித்து கிராம மக்கள் நேற்று காலை 9:00 மணிக்கு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலஹாசன், சப் இன்ஸ்பெக்டர் ராஜி ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, குடிநீர் பைப் லைன் சீர் செய்வதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று அனைவரும் கலந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
28-Sep-2024