உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திருப்பதிக்கு பாத யாத்திரை

திருப்பதிக்கு பாத யாத்திரை

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த பஞ்சமாதேவி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாள் கோவிலில், இருந்து பக்தர்கள் திருப்பதிக்கு 12ம் ஆண்டாக பாதயாத்திரையாக புறப்பட்டனர்.பஞ்சமாதேவி திருவேங்கடாஜலபதி பக்த சமாஜம் சேவாத்திரிகள் குழுவினரின் 12ம் ஆண்டு திருப்பதி பாதயாத்திரை நேற்று புறப்பட்டது. இன்று 28ம் தேதி தென்புத்துார், தீவனுார் ரேணுகாதேவி மண்டபம், வெள்ளிமேடுப்பேட்டை திரவுபதியம்மன் கோவில் வழியாக செல்கின்றனர். 29ம் தேதி நாவல்பாக்கம் முருகன் கோவில், தென்னாங்கூர் கோவில், 30ம் தேதி காஞ்சிபுரம் கோவில், 2ம் தேதி திருச்சானுார் பத்மாவதி தாயார் கோவில், 3ம் தேதி திருப்பதிக்கு சென்று நடைபாதை படி ஏறி சுவாமி தரிசனம் செய்கின்றனர்.பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் துளசி மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து பாதையாத்திரை செல்வது குறிப்பிடதக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி