பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
செஞ்சி : செஞ்சியில் வனத்துறை சார்பில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.வனத்துறை அலுவலகத்திலிருந்து துவங்கிய ஊர்வலத்திற்கு மாவட்ட உதவி வன பாதுகாவலர் தர்மலிங்கம் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். செஞ்சி வனச்சரகர் பழனிவேல் வரவேற்றார்.ஸ்ரீரங்கபூபதி பார்மசி கல்லுாரி முதல்வர் விஜயகுமார், செக்கோவர் இயக்குநர் அம்பிகா சூசைராஜ் முன்னிலை வகித்தனர்.ஊர்வலத்தில், கல்லுாரி மாணவர்கள், வனத்துறையினர், தன்னார்வலர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர். மேலும், காப்புக்காடு பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினர்.வனவர் பாலசுந்தரம், வனகாப்பாளர்கள் பச்சையப்பன், முருகன், கார்த்திகேயன், வன காவலர்கள் சக்திவேல், கலைமணி, கோவிந்தன், சம்பத் மற்றும் செக்கோவர் நிறுவன ஊழியர்கள் பங்கேற்றனர்.