மேலும் செய்திகள்
மஞ்சள் மாநகரில் கம்பம் ஊர்வலம் கோலாகலம்
06-Apr-2025
விழுப்புரம் கோலியனுார் அடுத்த பனங்குப்பம் ஊராட்சியில், மாவட்ட துாய்மை பாரத இயக்கம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு மற்றும் துாய்மைப்படுத்துதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நரிக்குறவர் காலனியில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஊராட்சி தலைவர் கோமதி மணி தலைமை வகித்தார். துணை தலைவர் சரவணன் வரவேற்றார். கோலியனுார் ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம் விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.பி.டி.ஓ., கார்த்திகேயன், ஒருங்கிணைப்பாளர்கள் சங்கர், வினோதினி, சுந்தரி, சண்முகப்பிரியா ஆகியோர், பிளாஸ்டிக் பொருள்களின் தீமை, சுற்றுப்புற துாய்மை குறித்து விளக்கினர்.கோலியனுார் கூட்ரோடு வரை சென்ற ஊர்வலத்தின்போது, பொது மக்களுக்கு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சள் துணி பை வழங்கப்பட்டது. குடியிருப்பு பகுதியில் இருந்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினர். நிகழ்ச்சியில், துாய்மை பணியாளர்கள், பொது மக்கள் பங்கேற்றனர்.
06-Apr-2025