உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியேற்பு

போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியேற்பு

செஞ்சி: செஞ்சி, ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி தலைமை தாங்கி உறுதிமொழி வாசித்தார். சப் இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், குமரேசன் முன்னிலை வகித்தனர். பொறுப்பு தலைமையாசிரியர் ராமசாமி வரவேற்றார். பேரூராட்சி கவுன்சிலர்கள் கார்த்திக், பொன்னம்பலம், சங்கீதா சுந்தரமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாணிக்கம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஏழுமலை நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை