உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பா.ம.க., பொதுக்குழு கூட்டம்

பா.ம.க., பொதுக்குழு கூட்டம்

செஞ்சி : புத்தகரம் கிராமத்தில் செஞ்சி மேற்கு ஒன்றிய பா.ம.க., பொதுக்குழு கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். தலைவர் லட்சுமணன் வரவேற்றார். ஊராட்சி தலைவர் சந்தானம், மாவட்ட துணைத் தலைவர் முருகன், செயற்குழு உறுப்பினர் குப்புசாமி முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர் ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார். ஊராட்சி தலைவர் ராஜா, மாவட்ட துணைச் செயலாளர் சுந்தரமூர்த்தி, வன்னியர் சங்க துணைச் செயலாளர் பெருமாள், செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், தமிழக முதல்வர் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், டிசம்பர் 21ந் தேதி திருவண்ணாமலையில் நடை பெறும் உழவர் பேரியக்க மாநில மாநாட்டில் அதிக அளவில் விவசாயிகளை அழைத்து செல்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ