பா.ம.க., பொதுக்குழு கூட்டம்
திண்டிவனம்: ஒலக்கூர் மேற்கு ஒன்றிய பா.ம.க., சார்பில் பொதுக்குழு கூட்டம் நடந்தது.கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் லட்சுமிபதி சுப்ரமணியம் தலைமை தாங்கினார். செயலாளர் ஆதிமூலம் வரவேற்றார். நிர்வாகிகள் வெங்கடேசன், களஞ்சியம், செல்வம், கிருஷ்ணராஜ், துரைசாமி முன்னிலை வகித்தனர்.விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சங்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜானகிராமன், மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் பாலாஜி, இளைஞரணி துணைச் செயலாளர் ராஜேஷ், திண்டிவனம் முன்னாள் நகர செயலாளர் சண்முகம் ஒன்றிய இளைஞரணி தலைவர் சேட்டு உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் நாளை 20ம் தேதி விழுப்புரத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரும் போராட்டத்தில் திரளாக பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.