பா.ம.க.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
செஞ்சி : அன்புமணி பா.ம.க., தலைவராக நீடிப்பார் என தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து செஞ்சியில் பா.ம.க.,வினர் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்திய தேர்தல் ஆணையம் நேற்று பா.ம.க., தலைவராக 2026ம் ஆண்டு வரை அன்புமணி நீடிப்பார் என்றும், மாம்பழம் சின்னத்தையும் ஏற்று அங்கீகரித்துள்ளது. இதையடுத்து நேற்று பா.ம.க.,வினர் செஞ்சி கூட்ரோட்டில் மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் ஜெயகுமார் தலைமையில் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர்கள், முருகன், அசோக் சக்கரவர்த்தி, திருமலை, குமார், பூங்காவனம் முன்னிலை வகித்த னர். மாவட்ட அமைப்பு செயலாளர் கலியமூர்த்தி. மாவட்ட துணைச் செயலாளர்கள் செல்வமணி, சம்பத், கணபதி, ராமு, நிர்வாகிகள் சதீஷ், ரமேஷ், கோபி, உதயா, ஹரிகுமார் பங்கேற்றனர்.