விளையாட்டு போட்டியில் போன்; நேரு பள்ளி சாதனை
திருவெண்ணெய்நல்லுார் ; தமிழக விளையாட்டுத்துறை சார்பாக பாரதியார் மற்றும் சுதந்திர தின விழாவையொட்டி மாவட்ட அளவில் நடந்த போட்டியில் போன் நேரு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.திருவெண்ணெய்நல்லுார் போன் நேரு பள்ளி மாணவர் தடி ஊண்றி தாண்டுதல் போட்டியில் 19 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 12ம் வகுப்பு ஹரிகரன் தங்கப்பதக்கம் பெற்று முதல் நிலையும், 12ம் வகுப்பு ஹரிஹரன் வெள்ளிப் பதக்கம் பெற்று இரண்டாம் நிலையும் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 10ம் வகுப்பு மாணவர் புவனேஸ்வரன் வெண்கல பதக்கம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கும் அதற்கு வழிகாட்டியாக செயல்பட்ட உடற்கல்வி ஆசிரியர் ஆறுமுகத்திற்கும் பள்ளியின் தாளாளர் வாசுதேவன் வாழ்த்து தெரிவித்து பாராட்டினார். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.