உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆக்கிரமிப்பு விளம்பர பலகைகள் அகற்றம் விழுப்புரத்தில் போலீஸ் அதிரடி

ஆக்கிரமிப்பு விளம்பர பலகைகள் அகற்றம் விழுப்புரத்தில் போலீஸ் அதிரடி

விழுப்புரம்: விழுப்புரத்தில் சாலையோரம் ஆக்கிரமித்த கடைகளின் விளம்பர பலகைளை போலீசார் அகற்றினர்.விழுப்புரம் நகரில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி கொண்டே செல்கிறது. இதற்கு சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் ஒருபுறம் இருந்தாலும், ஷேர் ஆட்டோக்கள் போக்குவரத்து விதிகளை மீறி தேவையற்ற இடங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வதாலும் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது.இதை ஒழுங்கு செய்யும் வகையில், விழுப்புரம் நகரில் இயங்கும் 49 ஷேர் ஆட்டோக்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை டிராபிக் போலீசார் விதித்து அதை பின்பற்ற வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர். அதே போல், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக தேவையற்ற இடங்களில் நிறுத்தப்படும் பஸ்களுக்கும், போலீசார் அபராதம் விதிக்கின்றனர்.இந்த நிலையில், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் வகையில் நேற்று விழுப்புரம் எம்.ஜி., ரோடு, பாகர்ஷா வீதி, கே.கே., ரோடு ஆகிய இடங்களில் நடைபாதைகளை ஆக்கிரமித்து வைத்திருந்த கடைகளின் விளம்பர பலகைகளை டிராபிக் போலீசார் அதிரடியாக அகற்றி, மீண்டும் இது போல் வைக்க கூடாது என எச்சரித்தனர். மேலும், இங்கிருந்த சாலையோர நடைபாதை வியாபாரிகளிடம் பொதுமக்களுக்கும், டிராபிக்கிற்கும் இடையூறு ஏற்படுத்ததாத வகையில் கடைகளை வைக்க வேண்டும். தவறினால் வழக்குப் பதிந்து அபராதம் விதிக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர். தொடர்ந்து, ஆட்டோ டிரைவர்களிடம் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய டிராபிக் போலீசார், போக்குவரத்து விதிகளை பின்பற்றி ஆட்டோக்களை இயக்க வேண்டும். விதிகளை மீறினால் வழக்குப் பதிந்து அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி