உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செஞ்சி அருகே 2 பேர் மாயம் போலீஸ் விசாரணை

செஞ்சி அருகே 2 பேர் மாயம் போலீஸ் விசாரணை

செஞ்சி: மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார். செஞ்சி பெரியகரம் பகுதியைச் சேர்ந்தவர் திருஞானமுத்து மனைவி பூங்குழலி, 37; இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. 11 வயதில் மகளும், 8 வயதில் மகனும் உள்ளனர். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு மாதமாக பூங்குழலி தாய் வீட்டில் தங்கியுள்ளார். கடந்த 5ம் தேதி மாலை 4:00 மணி முதல் பூங்குழலியை காணவில்லை. அவரது தாய் விஜயா, 55; அளித்த புகாரின் பேரில், செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஒரு வழக்கு செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் ஏழுமலை, 40; இவரது மனைவி சரண்யா. இவர், மகளிர் சுய உதவி குழுவில் வங்கிய கடனுக்காக பணம் செலுத்த, ஏழுமலை தனது தாய் விஜயாவிடம் கேட்டுள்ளார். விஜயா, பணம் இல்லை என கூறியதால் ஏழுமலை அவரை திட்டியுள்ளார். இதனால், மனமுடைந்த விஜயா, 60; கடந்த 1ம் தேதி வீட்டை விட்டு சென்றார். வீடு திரும்பவில்லை. ஏழுமலை அளித்த புகாரின் பேரில், சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை