ட்ரோன் பறந்ததாக புரளி போலீசார் விசாரணை
விக்கிரவாண்டி:முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மீது ட்ரோன் பறந்ததாக தகவல் பரவியதால் போலீசார் விசாரணை நடத்தினர்.விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மீது நேற்று காலை, 6:00 மணிக்கு ட்ரோன் பறந்ததாக விக்கிரவாண்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கிடைத்தது.போலீசார் மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டனர். மருத்துவமனை மீது ட்ரோன் ஏதும் பறக்கவில்லை என, தெரியவந்தது. விசாரணையில், மருத்துவக் கல்லுாரிக்கு எதிரில் விவசாய கருவி சீரமைக்கும் கம்பெனியில், நேற்று முன்தினம் மாலை பூச்சி மருந்து தெளிக்கும் ட்ரோன் சீரமைத்து சோதனை ஓட்டம் செய்துள்ளனர்.நேற்று காலை வடகுச்சிபாளையம், ஒரத்துார் கிராம விவசாய நிலங்களில் ட்ரோன் பயன்படுத்தி பூச்சி மருந்து தெளித்தனர். இதைப்பார்த்த சிலர் மருத்துவமனை மீது ட்ரோன் பறந்ததாக புரளி பரப்பியது தெரியவந்தது.