உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீடு புகுந்து திருட்டு போலீஸ் விசாரணை

வீடு புகுந்து திருட்டு போலீஸ் விசாரணை

விழுப்புரம் : லாரி புக்கிங் அலுவலக உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம், சாலாமேட்டைச் சேர்ந்தவர் பாலமுருகன், 53; லாரி புக்கிங் அலுவலகம் வைத்துள்ளார். இவர், கடந்த 26ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, நாமக்கல் சென்றுள்ளார். நேற்று திரும்பிவந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவை உடைத்து, பீரோவில் இருந்த நான்கரை சவரன் நகை மற்றும் 2,500 ரூபாய் திருடு போனது தெரியவந்தது.விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ