உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

வானுார் : வானுார் அருகே காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.காட்ராம்பாக்கம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன் மகள் சுகந்தி, 20; வானுார் தனியார் கல்லுாரியில், டிப்ளமோ லேப் டெக்னீஷியன் படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த 14ம் தேதி, அவர் படித்த கல்லுாரியில் அழைத்ததாகக்கூறி விட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாய் சுமதி, கிளியனுார் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, காணாமல் போன சுகந்தியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை