உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போலீஸ் சிறப்பு பெண் சப் இன்ஸ்பெக்டர் வீட்டில் கதவை உடைத்து 15 சவரன் திருட்டு

போலீஸ் சிறப்பு பெண் சப் இன்ஸ்பெக்டர் வீட்டில் கதவை உடைத்து 15 சவரன் திருட்டு

கண்டமங்கலம்: கண்டமங்கலம் அருகே போலீஸ் சிறப்பு பெண் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் புகுந்து 15 சவரன் நகைகள் உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்ற ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர். கண்டமங்கலம் அருகே உள்ள மிட்டாமண்டகப்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் ஆடியபாதம், 58; இவர் பாக்கம் கூட்ரோட்டில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஆனந்தநாயகி 53; கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 11ம் தேதி இரவு குடும்பத்தினர் அனைவரும் துாங்கிவிட்டனர். அடுத்த நாள் காலை எழுந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 15.7 சவரன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் மதிப்புடைய வெள்ளி பொருட்டுகள் மற்றும் ரூ.23 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.இவற்றின் மதிப்பு ரூ.6 லட்சமாகும். இது குறித்து ஆடியபாதம் கொடுத்த புகாரின்பேரில், கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ