உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மண்பாண்ட தொழிலாளர்கள் கைவினை பயிற்சி முகாம்

மண்பாண்ட தொழிலாளர்கள் கைவினை பயிற்சி முகாம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் கைவினை பயிற்சி முகாம் நடந்தது. விழுப்புரம் மாவட்ட கதர் கிராம தொழில் வாரியம் சார்பில், நடந்த கைவினை பயிற்சி முகாமிற்கு, மாவட்ட துணை தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஏழுமலை முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் வினோத் பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். கதர் கிராம தொழில் வாரிய பயிற்சியாளர்கள் வெங்கட்ராமன், பாலமுருகன், வனிதா ஆகியோர் தொழிலாளர்களுக்கு பொம்மைகள், சிற்பங்கள், மண்பாண்டம், பூ ஜாடிகள் செய்ய பயிற்சி அளித்து ஆலோசனை வழங்கி பேசினர். ராதாபுரம் , சோழிய சொற்குளம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் முகாமில் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !