உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு மருத்துவமனையில் டாக்டர்களுக்கு பாராட்டு

அரசு மருத்துவமனையில் டாக்டர்களுக்கு பாராட்டு

திண்டிவனம்,: பிறவியிலேயே எலும்பு வளர்ச்சி பாதிக்கப்பட்ட, இருவருக்கு அரசு பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவக்குழுவினரை இணை இயக்குநர் பாராட்டினார். திண்டிவத்தை சேர்ந்த, 17 வயது பெண்ணின் இரண்டு கைகளில், வலது கையின் நீளம் குறைவாக இருந்தது. இதேபோல, 49 வயது ஆண் ஒருவருக்கு, பிறவியிலேயே இடது பக்க கால் வளைந்து இருந்தது. இந்த குறைபாடுகளை, திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில், முட நீக்கியல் டாக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் பழைய நிலைக்கு கொண்டு வந்தனர். சிகிச்சை பெற்ற இருவரையும், மருத்துவத்துறை இணை இயக்குனர் ரமேஷ்பாபு நேரில் சந்தித்து, சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.நிகழ்ச்சியில் தலைமை மருத்துவ அதிகாரி முரளிஸ்ரீ, டாக்டர்கள் கோதை, சீனுவாசன், ஆல்வின்பாபு, ஜெய்கணேஷ், செவிலியர் கண்காணிப்பாளர் விஜயா, எமோலி, மேலாளர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை