உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு போக்குவரத்து கழக டிரைவர்களுக்கு பாராட்டு

அரசு போக்குவரத்து கழக டிரைவர்களுக்கு பாராட்டு

விழுப்புரம்: விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் தலைமை அலுவலகத்தில், ரூ.1 லட்சத்தி ற்கு மேல் வருவாய் ஈட்டிய 455 கண்டெக்டர், ஓட்டுநர்களுக்கு பாராட்டு விழா மற்றும் மண்டல அலுவலகத்தில் உள்ள பொது மேலாளர், புதுப்பிக்கப்பட்ட கணினி பிரிவு, வணிகப்பிரிவு ஆகியவற் றிற்கான திறப்பு விழா நடைபெற்றது . இதில் மேலாண் இயக்குநர் குணசேகரன் தலைமை தாங்கினார். அவர் பேசியதாவது: ஒரு 'டியூட்டி'யில் மட் டும் ரூ.1 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டிய 983 பேரில், 543 பேருக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதில், மீதமுள்ள 135 ஓட்டுநர்கள், 212 கண்டெக்டர்கள், 59 கிளை மேலாளர்கள், 59 அலுவலர்கள் உட்பட 440 நபர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிளை அலுவலகங்களை புதுப்பிக்க ரூ.1.50 கோடி மதிப்பீட்டு தயார் செய்யப்பட்டு 12க்கும் மேற்பட்ட கிளை அலுவலகங்களை புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கண்டெக்டர், ஓட்டுநர் களுக்கு அனைத்து கிளைகளிலும் குளிரூட்டப்பட்ட ஓய்வறை வசதிகள் செய் யப்பட்டுள்ளது. பணிகாலத் தில் இறந்த குடும்பங்களுக்கு உதவ, தொழிலாளர் ஒத்துழைப் போடு தடா நிதியுதவி 8 நபர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.80 லட்சமும், பணியில் அல்லாது போது இறந்தவர்களின், 143 குடும்பங்களுக்கு ரூ.7.15 கோடியும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார். இதில், தொழில்நுட்பம் பொது மேலாளர் ரவீந்தி ரன், பொது மேலாளர்கள் ஜெய்சங்கர் (விழுப்புரம் மண்டலம்), பாண்டியன் (கடலுார் மண்டலம்), ஸ்ரீதரன் (திருவண்ணாமலை மண்டலம்), கிருஷ்ணமூர்த்தி (காஞ்சிபுரம் மண்டலம்), கோபாலகிருஷ்ணன் (திருவள்ளூர் மற்றும் வேலுார் மண்டலம்) உட்பட துணை மேலாளர்கள், உதவி மேலாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், தொழிற்சங்க பிரதி நிதிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை