மேலும் செய்திகள்
சுகாதார நிலையம் திறப்பு விழா
04-Jul-2025
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு நடந்தது.முதல்வர் ஸ்டாலின் சென்னை, அடையாறு சாஸ்திரி நகர் பகுதியில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள நலவாழ்வு மையங்களையும் மற்றும் ஊரக, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த செம்மார் கிராமத்தில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொன்முடி எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், ஒன்றிய சேர்மேன் ஓம் சிவ சக்திவேல், கவுன்சிலர் சரவணன், ஊராட்சி தலைவர் ஷிபாராணி ஏழுமலை, மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில்குமார், செயற்பொறியாளர் பாலாஜி, உதவி பொறியாளர் (கட்டடம் பராமரிப்பு) பொன்னி, மருத்துவ அலுவலர் காயத்ரி பலர் பங்கேற்றனர்.
04-Jul-2025