உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

செஞ்சி : மேல் ஒலக்கூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினர் செஞ்சி தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.செஞ்சி அடுத்த மேல் ஒலக்கூர் கிராமத்தில் 13 பழங்குடியினர் பல ஆண்டுகளாக குளத்து புறம்போக்கு இடத்தில் வசித்து வருகின்றனர். தங்களுக்கு பட்டா கேட்டு நீண்ட காலமாக போராடி வருகின்றனர். பழங்குடியினர் செஞ்சி தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் அறிவித்திருந்தனர். அதன்படி இந்திய கம்யூ., மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கருணாகரன் தலைமையில் பழக்குடியினர் பாத்திரங்களுடன் செஞ்சி தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர்.அவர்களுடன் தாசில்தார் செல்வக்குமார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி, வரும் மே மாதம் 20ம் தேதிக்குள் பட்டா வழங்குவதாக தாசில்தார் உறுதியளித்தார். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.பேச்சுவார்த்தையில், இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, ஊராட்சி தலைவர் மாலா சிவக்குமார், பழங்குடியினர் பிரதிநிதிகள் தனம், மஞ்சுளா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை