பட்டா கேட்டு தாசில்தார் அலுவலகத்தில் தர்ணா
செஞ்சி; செஞ்சி தாசில்தார் அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு நடந்த உள்ளிருப்பு போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. செஞ்சி அடுத்த ஜம்போதி கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டு மனை பட்டா கேட்டு போராடி வருகின்றனர் இந்நிலையில் நேற்று செஞ்சி தாசில்தார் அலுவலகம் உள்ளே வராண்டாவில் அப்பகுதி மக்கள் உட்கார்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து வந்த செஞ்சி இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன், ஆர்.ஐ., பிரபு சங்கர் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.