திண்டிவனத்தில் தரைப்பாலம் உடைப்பு எம்.எல்.ஏ., தலைமையில் ஆர்ப்பாட்டம்
திண்டிவனம்: திண்டிவனம், நாகலாபுரத்தில் 8 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தற்காலிக தரைப்பாலம் உடைந்ததால், நகராட்சியை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திண்டிவனத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அர்ஜூனன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாநில ஜெ., பேரவை துணைச் செயலாளர் பாலசுந்தரம், நகர செயலாளர் தீனதயாளன், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரமற்ற தரைப்பாலம் கட்டிய நகராட்சி மற்றும் தி.மு.க., அரசை கண்டித்து பேசினர். மேலும், ஒப்பந்தத்தில் மோசடி நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக தரமான பாலம் அமைத்துக்கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மாநில நிர்வாகி ஏழுமலை, நகர ஜெ., பேரவை செயலாளர் ரூபன் ராஜ், பொதுக்குழு உறுப்பினர் தேவநாதன், நகரமன்ற கவுன்சிலர்கள் ஜனார்த்தனன், சரவணன், திருமகள், முன்னாள் கவுன்சிலர் செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர். பா.ஜ., பிரசார பிரிவு திண்டிவனம் பா.ஜ., பிரசார பிரிவு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வடக்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். திண்டிவனம் சட்டசபை தொகுதி அமைப்பாளர் எத்திராஜ், வழக்கறிஞர் பிரிவு செந்தில், விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் ராஜா, ஐ.டி., பிரிவு மாவட்ட தலைவர், செந்தில் முன்னிலை வகித்தனர். பிரசார பிரிவு மாநில செயலாளர் தினேஷ்குமார் கண்டன உரையாற்றினார். நிர்வாகிகள் பாலாஜி, சுகுமார், முரளி சுதாகர், பிரபாகரன், தண்டபாணி உட்பட பலர் பங்கேற்றனர்.