வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி மயிலம் ரோட்டில் மறியல்
வானூர்: வெள்ள நிவாரணம் கேட்டு, மயிலம் ரோடு-தொள்ளாமூர் சாலை சந்திப்பில் பொது மக்கள் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.தமிழக அரசின் வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி நேற்று காலை 11;00 மணிக்கு குன்னம், இளவம்பட்டு கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள், மயிலம் ரோடு-தொள்ளாமூர் சாலை சந்திப்பில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் வானூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும், தொடர்ந்து மறியலில் ஈடுட்டனர்.இதை தொடர்ந்து பொது மக்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து மறியலில் ஈடுப்பட்ட ஆண்களை, போலீசார் குண்டுகட்டாக, தூக்கி கைது செய்து பஸ்சில் ஏற்றினர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 50க்கும் மேற்பட்ட பெண்கள் சாலையில் படுத்து மறியல் செய்தனர். பெண் போலீசார் வராததால், பெண்களை கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்ட்து. இதை தொடர்ந்து கைது செய்து பஸ்சில் ஏற்றிய ஆண்களையும் போலீசார் விடுவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்திருந்த வானூர் தாசில்தார் நாராயணமூர்த்தி அரசிடம் தெரிவித்து நிவாரணம் வழங்குவதாக கூறியதின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக மயிலம்-புதுச்சேரி சாலை, தொள்ளாமூர் செல்லும் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.