உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / எஸ்.ஐ.ஆர்., கைவிடக் கோரி நாளை ஆர்ப்பாட்டம்

எஸ்.ஐ.ஆர்., கைவிடக் கோரி நாளை ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்தை கைவிடக் கோரி, விழுப்புரத்தில் நாளை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. விழுப்புரம் தி.மு.க., மாவட்ட செயலாளர் மஸ்தான், பொறுப்பாளர்கள் லட்சுமணன், கவுதமசிகாமணி ஆகியோரது அறிக்கை: தேர்தல் ஆணையம் சார்பில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சீராய்வு, தமிழக மக்களின் ஓட்டுரிமையை பறிப்பதாக உள்ளது. ஜனநாயகத்துக்கு எதிராக தேர்தல் ஆணையம் காட்டும் அவசரம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் சீராய்வை தேர்தல் ஆணையம் உடனே கைவிட வேண்டும். மத்திய பா.ஜ., அரசின் கைப்பாவையாக மாறி ஏதேச்சதிகார போக்கோடு வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் செயல்படுத்துவதை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை 11ம் தேதி காலை 9:00 மணிக்கு விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தி.மு.க., மாநில துணை பொதுச் செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ., கண்டன உரையாற்றுகிறார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, விழுப்புரம் தெற்கு, வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருக்கோவிலுார், விக்கிரவாண்டி, செஞ்சி, மயிலம், திண்டிவனம் தொகுதிகளைச் சேர்ந்த கட்சியினர், கூட்டணி கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி