பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபரகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.கண்டாச்சிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.பி கவுதமசிகாமணி தலைமை தாங்கினார்.மகளிர் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி வரவேற்றார்.மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன்,ஒன்றிய சேர்மேன் தனலட்சுமி உமேஷ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு நோட்டு மற்றும் விளையாட்டு உபகரணங்களை முன்னாள் எம்.பி கவுதமசிகாமணி வழங்கினார்.இதில் ரவிக்குமார், ஊராட்சி துணைத்தலைவர் ஜீவானந்தம், பி.டி.ஏ தலைவர் இளஞ்செழியன், பிரபு, ஒன்றிய கவுன்சிலர் சுலோச்சனா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.ஆண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயசீலன் நன்றி கூறினார்.