உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கல்

நகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கல்

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி முன் களப்பணியாளர்கள் மற்றும் துாய்மை பணியாளர்களுக்கு, நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. விழுப்புரம் பழைய நகராட்சி அலுவலக கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகர மன்ற சேர்மன் தமிழ்ச்செல்வி பிரபு தலைமை தாங்கினார். தி.மு.க., மாவட்ட துணைச் செயலாளர் இளந்திரையன், நகர செயலாளர் சக்கரை, பொருளாளர் இளங்கோ, நகர் மன்ற துணை சேர்மன் சித்திக் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் டாக்டர் கவுதமசிகாமணி கலந்து கொண்டு, நகராட்சியில் பணியாற்றும் முன் களப்பணியாளர்கள் மற்றும் துாய்மை பணியாளர்கள் 450 நபர்களுக்கு, போர்வை, அரிசி உள்ளிட்ட வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்கினார்.இதில், நகர நிர்வாகிகள் நந்தா நெடுஞ்செழியன், புருஷோத்தமன், நகர மன்ற கவுன்சிலர்கள் அன்சர் அலி, வெற்றி, கோமதி பாஸ்கர், பத்மநாபன், சங்கர், அணி நிர்வாகிகள் கேபிள் சுரேஷ்பாபு, வினோத், வெங்கடேசன், அன்பரசு, குருராமலிங்கம், இளையராஜா, சந்தோஷ், பூபாலன் ஆகியோர் உடனிருந்தனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, நகர மன்ற சேர்மன் தமிழ்ச்செல்வி பிரபு ஏற்பாடு செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ