மேலும் செய்திகள்
கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து
02-Oct-2025
விழுப்புரம்: காசநோயால் பாதித்தவர்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், நடந்த நிகழ்ச்சியில், வசந்தம் பவுண்டேசன் உதவியுடன், காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீபாவளி கொண்டாடும் விதமாக, ஊட்டச்சத்து பொருள்கள் மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டது. வசந்தம் பவுண்டேசன் நிர்வாகி சாம்சன்டேனியல் 20 காசநோயாளிக்கு ஊட்டச்சத்து மற்றும் புத்தாடைகள் வழங்கினார். காசநோய் பிரிவு டாக்டர் செல்வாஜோன், காசநோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர் சிகிச்சை எடுத்துக்கொள்வதன் முக்கியத்துவம் பற்றியும், தொடர் மருத்து எடுக்கும்போது ஏற்படும் பிரச்னைகள், அதற்கு உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்வது. வீட்டில் உள்ள உறவினர்களையும், காசநோய் சளி பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே செய்துகொண்டு, பாதிப்பு இருப்பின் மருத்துவம் எடுத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி பேசினார். மாவட்ட காசநோய் பணியாளர்கள் கீதா, கலையழகன், குமார், பாலசுப்ரமணி பங்கேற்றனர்.
02-Oct-2025