உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குழந்தைகள் இல்லங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

குழந்தைகள் இல்லங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

விழுப்புரம்: விழுப்புரம் கிருபாலயா குழந்தைகள் இல்லத்தில், பாரத ஸ்டேட் வங்கி சென்னை வட்டார தலைமையகம் சார்பில், ஐ.ஆர்.சி.டி.எஸ்., தொண்டு நிறுவனம் மூலம் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொண்டு நிறுவன நிர்வாக செயலர் ஸ்டீபன் வரவேற்றார். ஸ்டேட் வங்கி தமிழகம் மற்றும் புதுச்சேரி தலைமை பொது மேலாளர் விவேகானந்த் சவுபே, 8 சிறப்பு இல்லங்களுக்கு நாற்காலிகள், கட்டில் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். அப்போது, வங்கி பொது மேலாளர் ஹரித்தாபூர்ணிமா, துணை பொது மேலாளர் பாலானந்த், மண்டல மேலாளர் ஜவகர், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பார்கவி, தொண்டு நிறுவன திட்ட மேலாளர் விஜயன், ஒருங்கிணைப்பாளர் பழனி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை