உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பள்ளிக்கு சீர்வரிசையாக கல்வி உபகரணங்கள் வழங்கல்

அரசு பள்ளிக்கு சீர்வரிசையாக கல்வி உபகரணங்கள் வழங்கல்

செஞ்சி: ஏம்பலம் அரசு துவக்க பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் கல்வி உபகரணங்களை சீர்வரிசையாக வழங்கினர். செஞ்சி அடுத்த ஏம்பலம் அரசு துவக்க பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் மற்றும் செஞ்சி அரிமா சங்கம் சார்பில் நோட்டு, புத்தகம், எழுது பொருட்கள், டிபன் பாக்ஸ், வாட்டர் பாட்டில்களை வழங்கப்பட்டன. இந்த பொருட்கள் மேள தாளத்துடன் கிராம பொதுமக்களுடன் ஊர்வலமாக எடுத்து வந்து பள்ளி ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து நடந்த பாராட்டு விழாவுக்கு ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் வெங்கடேஷ், புருஷோத்தமன் முன்னிலை வகித்தனர். அரிமா சங்க மாவட்ட தலைவர்கள் சொர்ணலதா, சண்முகம், முருகன், நவநீதகிருஷ்ணன், நகர தலைவர் பரிமளகந்தி, செயலாளர் புகழேந்தி, பொருளாளர் பத்மா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆசிரியர் எழில் சாந்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !