உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு மருத்துவமனைக்கு உபகரணம் வழங்கல்

அரசு மருத்துவமனைக்கு உபகரணம் வழங்கல்

விழுப்புரம்: வளவனுார் அரசு மருத்துவமனைக்கு, உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ரோட்டரி சங்கம் சார்பில், 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பாரா மெடிக்கல் இ.சி.ஜி., உபகரணங்கள் வழங்கும் விழாவிற்கு, சங்கத் தலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார். துணை ஆளுநர் கந்தன், முன்னாள் தலைவர் கன்யா ரமேஷ், திட்ட சேர்மன் சரவணகுமார், இளங்கோ, பாலகுருநாதன், செயலாளர் வினோத், முன்னாள் செயலாளர் அன்பழகன், பொருளாளர் சுரேஷ், குமரன் முன்னிலை வகித்தனர். அரசு மருத்துவ அலுவலர் கோதை நாயகி, உபகரணங்களை பெற்றுக் கொண்டார்.சங்க நிர்வாகிகள் சிவதியாகராஜன், ராதாகிருஷ்ணன், கணேஷ் குபேர் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, நோயாளிகளுக்கு புவனேஸ்வரி பாலகுருநாதன் பிரட் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ