ரூ.1.69 கோடியில் கறவை மாடு வாங்குவதற்கான லோன் வழங்கல்
அவலுார்பேட்டை: மேல்மலையனுாரில் 1.69 கோடி ரூபாய்க்கு கறவை மாடுகள் வாங்குவதற்கான லோன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மேல்மலையனுார் இந்தியன் வங்கியில் கறவை மாடு வாங்கும் 169 பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சிக்கு, வங்கி துணை மண்டல அலுவலர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். கிளை மேலாளர் ராஜிவ் ரஞ்சன் வரவேற்றார்.அமைச்சர் மஸ்தான், ஒரு கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பில் 169 பயனாளிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் கறவை மாடு வாங்க லோன் பெறுவதற்கான காசோலையை வழங்கினார்.நிகழ்ச்சயில், செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார், கவுன்சிலர் நெடுஞ்செழியன் உட்பட பலர் பங்கேற்றனர்.